முன்னாள் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரியவை விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு பாரிய மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளைய தினம் அவரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் 5 உறுப்பினர்களுக்கு சட்டவிரோதமாக பொலிஸ் பாதுகாப்பை வழங்கியதன் மூலம் அரசுக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ஆணைக்குழு முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் விசாரணை நடத்தவுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், சிசிர குமார திஸாநாயக்க உட்பட 5 பேருக்கு 2010 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி வரை ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.