இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றை அடித்து நொருக்கியுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருந்தே இந்த உத்தரவை இன்று ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் உயர் அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தாஹாம், இரவு நேர களியாட்ட விடுதி சம்பவத்தின் போது அங்கு இருக்கவே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான ரோஹித்தவே அவருடைய நண்பர்களுடன் வருகை தந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் மகனான தாஹாம் சிறிசேனவே ஜனாதிபதியின் பாதுகாவலர்களுடன் குறித்த களியாட்ட விடுதிக்கு சென்று அடித்து நொருக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதோடு, நேற்றை கூட்டு எதிர்க்கட்சின் கூட்டத்தில் விமல் வீரவன்ச தாஹாம் சிறிசேனவே இதை செய்துள்ளார் என்று கூறினார்.
இதன் மூலம் ஜனாதிபதியின் மகனே இந்த குற்றத்தை செய்துள்ளதாக பரவலான செய்திகள் வெளிவந்துள்ளன. இதை அறிந்த ஜனாதிபதி தனது மகனாக இருந்தாலும் உண்மைகள் மறைக்கப்படக் கூடாது என்பதற்கு ஏற்ப தாய்லாந்திலிருந்து உண்மையை கண்டறியுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.