அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் விடயங்கள் அடங்கிய அறிக்கை அடுத்த மாதம் அரசியலமைப்புச் சபையிடம் சமர்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு வரைவு சம்பந்தமாக தற்போது இணக்கம் ஏற்பட்டுள்ள விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நடவடிக்கை குழுவில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் பிரதான கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது. ஆறு உப குழுக்களின் அறிக்கைகள் தற்போது கிடைத்துள்ளன.

சில பிரதான விடயங்கள் குறித்து தற்போது கலந்துரையாடி வருகிறோம். குறிப்பாக தேர்தல் முறை, நிறைவேற்று அதிகாரம், அதிகார பரவலாக்கல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

சில விடயங்கள் தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளதுடன் மேலும் சில விடயங்கள் குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது எனவும் ஜயம்பதி விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.