விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதிக்கவுள்ள மஹிந்த அணி

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்றில் அனல்பறக்கும் விவாதங்களை நடத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.

எழுக தமிழ் பேரணியில் முதலமைச்சர் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் கூட்டு எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பின் அடுத்த கட்டத்திற்கு சென்று நாடாளுமன்றில் விவாதிக்க உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் வடமாகாண முதலமைச்சரை மிகவும் மோசமான இனவாதியாக மஹிந்த தரப்பு மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையிலேயே இன்றைய தினம் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போதும் கடும் கண்டனத்தை வெளியிட தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.