எந்த ஒரு காரணத்திற்காகவும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணங்களை அதிகரிக்குமாறு இலங்கை மின்சாரசபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
6 மாதங்களுக்கு 5 வீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சாரசபை தெரிவித்திருந்தது.
தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணம் தொடர்ந்தும் இருந்தால் 850 மில்லியன் ரூபா நட்டத்தை சந்திக்க நேரிடும் என மின்சார சபை சுட்டிக்காட்டியிருந்தது.
எனவே இதற்கு பதிலளிக்கும் வகையில், மின் கட்டணங்கள் எந்த காரணத்திற்காகவும் அதிகரிக்கப்படாது என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.