அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவு வடக்கு முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரனின் குரலில் செயற்பட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்துள்ளார்.
வடக்கு கிழக்கை இணைத்து சம்பந்தனை முதலமைச்சர் ஆக்குவதற்கு அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவு சீ.வி. விக்னேஸ்வரனின் குரலில் செயற்பட்டு வருகின்றது.
தற்போது தென் இலங்கை மற்றும் ஏனைய இடங்களிலும் விக்னேஸ்வரன் தொடர்பிலேயே பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தனோ நல்லவர் போல சித்தரித்து காட்டப்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறு வடக்கு கிழக்கை இணைத்து சம்பந்தனை முதல்வராக்கும் திட்டத்தை அமெரிக்கா முன்னின்று செயற்படுவதாகவும் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.