தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 295 ரன்களை சேஸிங் செய்யும்போது தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்கள் டி காக் (178), ரொஸவ் (63) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டின்போது அம்லாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று 2-வதுநாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது அம்லா குணமடைந்து விட்டார். ஆனால், தென்ஆப்பிரிக்கா அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. ஒருநாள் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அம்லா முக்கிய போட்டியில் இடம்பெறாதது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அம்லா அணியில் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் தென்ஆப்பிரிக்கா அணியி்ன் கேப்டன் கெப்லர் வெசல்ஸ் கூறுகையில் ‘‘அம்லாவின் உடல்நிலை சரியாக இல்லை என்று என்னிடம் கூற முடியாது. நான் உண்மையிலேயே மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன். அம்லா தென்ஆப்பிரிக்காவின் சிறந்த வீரர். தென்ஆப்பிரிக்கான கேப்டன் ஏபி டிவில்லயர்ஸ் காயம் காரணமாக வெளியில் இருக்கும் நிலையில், அம்லா அணிக்கு கட்டாயம் தேவை’’ என்றார்.