அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத்திட்டத்தை உடனடியாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கவும் : ஜனாதிபதி

 
 
maithripala-ferial-sunami-nuraichcholai
 
 
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவுதி அரசினால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும் உடனடியாக பகிா்ந்தளிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அம்பாறை மவாட்டச் செயலாளா் துசித்த பீ. வணிகசிங்க நேற்று (1) ஊடகங்களுக்கு தெரிவித்தாா்.
 
 
 
அம்பாறை மாவாடடச் செயலாளா் மேலும்  தகவல் தருகையில் –
 
ga-picture-2015
 
 
இவ் வீடமைப்புத்திட்டம் பற்றி கடந்த காலங்களில் தொலைக்காட்சி, மற்றும் சமுக வலைத்தளங்கள்,  பாராளுமன்ற உறுப்பிணா்களும் , பாராளுமன்றத்திலும்  கேள்வி  எழுப்பியிருந்தனா்.  மற்றும்    அ மைச்சா்கள், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தனா்.   அத்துடன்  தேசிய பத்திரிகையில் மட்டுமல்ல  றியாதில் வெளிவரும்   அரபு நியுஸ் பத்திரிகைகளிலும் இவ் வீடமைப்புத்திட்டம் பகிா்ந்தளிக்காமல் இருப்பதனை சுட்டிக்ககாட்டப்பட்டது.
 
 
 
அத்துடன்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் உத்தரவின்படி இவ் வீடமைப்புத்திட்டத்தினை உயா் நீதிமன்ற தீா்ப்பின் படி பகிர்ந்தளிக்கும் படி எனக்கு அறிவித்துள்ளாா்.   அதற்கமைவாக  அம்பாறை மாவட்டத்தில் வாழும் மூன்று சமுகத்திடமும்  இவ் வீடுகள்  பகிா்ந்தளிக்கப்படும்.  அத்துடன் இவ் வீடமைப்புத்திட்டம் சம்பந்தாக கடந்த வாரம் சம்பந்தப்பட்ட    அதிகாரிகளுடன்  எனது தலைமையில் கலந்துரையாடப்பட்டது.  எதிா்வரும் டிசம்பா் 31ஆம் திகதிக்கு முன்னா்  இவ்  500 வீடுகளும்  , பாடசாலை. வைத்தியசாலை. பள்ளிவசாலகள்  மக்களிடம் கையளிக்கபபடும் என அரச அதிபா் ஊடகங்களுக்கு தெரிவித்தாா்.
 
 
 
சவுதி அரசினால் அக்கரைப்பற்று நுரைச்சோலையில்  வழங்கப்பட்ட சவுதி வீடமைப்புத் திட்டம் பாரியதொரு வீடமைப்புத் திட்டமாகும். அத்திட்டம் கடந்த 8 வருடங்களாக எவருக்கும் பிரயோசனமற்ற முறையில் காடுகளாகி வீடுகள் சேதமாக்கப்பட்டு அழிந்து நாசமடைந்து வருகின்றது.
 
 
 
கடந்த 2004 டிசம்பா் 26ஆம் திகதி நடைபெற்ற சுனாமி அணா்த்தின்போது   ,முன்னளா்  வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த பேரியல் அஸ்ரப்  அவா்களினால்    1000  மில்லியன் பெறுமதியான ”சுனாமி ஹிங் ஹூசைன் வீடமைப்புத்திட்டத்தினை”  நிர்மாணிக்க நடவடிக்கையின் பேரிலேயே இவ் வீடமைப்புத்திட்டம் நிர்மாணிக்க்பட்டது.
 
 
 
இவ் வீடமைப்புத்திட்டம் சம்பந்தமாக   அப்போது ஆட்சியல் இருந்த சிகல உருமைக் கட்சியினால் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா  இத் திட்டத்தினை மூன்று இனத்திற்கும் அவரவா்களது இன விகிதசாரத்திற்கேற்ப  சுனாமியினால் பாதிக்க்பபட்ட மக்களுக்கு பகிா்ந்தளிக்கும் படி  தீர்ப்பு வழங்கினாா்.  தீா்ப்பு வழங்கியும் 8 வருடங்கள் ஆகிவிட்டன.
 
 
 
அஷ்ரப் ஏ சமத்