இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில், 2009ஆம் ஆண்டு யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டது.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இலங்கையில் இன்னும் சமாதானம் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சமாதானத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கைவிட்டமையே இதற்கு காரணம் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொலம்பியாவை இலங்கை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் எனவும் இந்த செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரைநூற்றாண்டு காலமாக கொலம்பியாவில் யுத்தம் நடைபெற்று வந்தது.
எனினும் தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வெற்றிகரமான சமாதான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எனவே, தற்போதுள்ள அரசாங்கம் கொலம்பியாவை முன்னுதாரணமாக கொண்டு, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.