பெட்ரோல் விலை லீட்டருக்கு 28 ரூபா உயர்வு; டீசல் விலை லீட்டருக்கு 6 ரூபா குறைப்பு

இந்திய மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலாவணி மாற்று விகிதத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றன.

 

a-person-using-petrol-pump

இந்நிலையில், பெட்ரோல் விலை லீட்டருக்கு 28 ரூபா இன்று உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் விலை லீட்டருக்கு 6 ரூபா குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.  

முன்னதாக, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி பெட்ரோல் விலை லீட்டருக்கு 58 ரூபா உயர்த்தப்பட்டது. அதேநேரம், டீசல் விலை லீட்டருக்கு 31 காசுகள் குறைக்கப்பட்டன