சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சார்க் மாநாட்டை ஒத்தி வைத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் இதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான புதிய தேதி, இடம் சார்க் தலைமை (நேபாளம்) மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த மாநாட்டை இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் புறக்கணித்து இருந்தது. கடைசி நாடாக இலங்கையும் சூழ்நிலை சரியில்லை என்று தனது கருத்தினை இன்று தெரிவித்தது.
இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் இந்த முடிவினை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.