கிழக்கில் அதாவை பலப்படுத்தவிருக்கும் நல்லாட்சி

athaullah maithri
 
கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்களை குறி வைத்து காய் நகர்த்தும் நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது . இதன் போது , 
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா அவர்களை தேசியப் பட்டியல் ஊடாக உள்வாங்கி அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி ஒன்றை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இந்த நியமனம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு புதியதொரு அரசியல் தலையிடியை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை .
இதே வேளை இ.தொ.கா பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம் மற்றும் ஈ.பி.டி.பி  தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்குவதற்கு பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சிலர் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் இது குறித்து இரகசிய பேச்சு வார்த்தைகளில்  ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ஈடுப்பட்டுள்ளனர்.  
 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி சமர்பிக்க உள்ளதோடு அதற்கு பின்னர் குறித்த பதவிகளை வழங்கவும் அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் இரு தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.