அம்­பாறை மாவட்­டத்தில் சுமார் 13 ஆயிரம் குடும்­பங்கள் குடிநீர் தட்­டுப்­பாட்டை எதிர்கொண்டுள்ளனர்

171

 

நாட்டில் ஐந்து மாகா­ணங்­களில் கடும் வரட்சி நில­வு­கின்ற நிலையில் பல்­லா­யிரக் கணக்­கான மக்கள் இதனால் நீரின்றி பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

இவற்றில் வட மத்­திய மாகா­ணமே அதி­களவில் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாவும் குறிப்­பாக பொல­ன­றுவை மாவட்­டத்தில் மாத்­திரம் சுமார் 34 ஆயிரம் பேர் குடி­நீ­ரின்றித் தவிப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மொன­ரா­கல, அம்­பாறை, வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, புத்­தளம், அநு­ரா­த­புரம் மற்றும் ஹம்­பாந்­தோட்டை ஆகிய மாவட்­டங்­களில் வாழும் பல்­லா­யிரக் கணக்­கான மக்கள் இவ் வரட்சி கார­ண­மாக குடிநீர் தட்­டுப்­பாட்டை எதிர்­கொண்­டுள்­ளனர்.

பொல­ன­றுவை மாவட்­டத்தில் சிறிய நீர் நிலைகள் கூட வற்­றி­யுள்­ளதால் பொது மக்கள் நீருக்கு பெரும் நெருக்­க­டியை எதிர்­நோக்­கு­வ­தாக பொல­ன­றுவை மாவட்ட அனர்த்த  முகா­மைத்­துவ உதவிப் பணிப்­பாளர் உபுல் நாண­யக்­கார தெரி­வித்­துள்ளார்.

இப் பகு­தி­களில் வாழும் மக்­க­ளுக்கு சுமார் 50 முதல் 100 லீற்றர் தண்ணீர் தேவைப்­ப­டு­கின்ற போதிலும் ஒரு குடம் அல்­லது ஒரு வாளி அள­வி­லேயே பவு­சர்கள் மூலம் தண்ணீர் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக மக்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

இதே­வேளை ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் சுமார் 8000 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் மக்கள் நீரின்றி தவிப்­ப­துடன் விவ­சாய நிலங்கள் கடு­மை­யான பாதிப்பைச் சந்­தித்­துள்­ளன.

அம்­பாறை மாவட்­டத்தில் சுமார் 13 ஆயிரம் குடும்­பங்கள் குடிநீர் தட்­டுப்­பாட்டை எதிர்­கொண்­டுள்­ள­தாக மாவட்ட செய­லாளர் நீல் டி அல்விஸ் குறிப்­பிட்­டுள்ளார்.

வரட்­சி­யினால் திரு­கோ­ண­மலை மாவட்­டமும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் சுமார் 10 முதல் 20 வீத­மான மழை வீழ்ச்சி குன்­றி­யுள்­ள­தாலும் 1.2 பாகை வெப்ப நிலை உயர்ந்­துள்­ள­தாலும் வரட்சி நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையில், நாட்டின் பல மாவட்­டங்­களில் தற்­போது நில­வி­வரும் வரட்சிக் கால­நிலை இன்னும் ஒரு வாரத்­திற்கு நீடிக்கும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. 

இதே­வேளை தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்புச் சபையும் பொது மக்­க­ளுக்­கான நீர் விநி­யோ­கத்தில் நெருக்­க­டியை எதிர்­நோக்­கி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்­ள­துடன் நீரைச் சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­து­மாறும் பொது மக்­களை கேட்டுள்ளது.