நாட்டில் தற்போது கிரிக்கட் வீரர்கள் பற்றிய செய்திகளும், அவர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்களில் இருந்து ஓய்வு பெற்ற பின் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
அந்த வரிசையில் டில்சான், குமார் சங்கக்கார, மஹெல போன்றோர்கள் அண்மையில் ஓய்வு பெற்று வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜெயசூரிய யாரும் செய்யாத ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
பாடசாலை சீருடையை அணிந்து மீண்டும் பாடசாலைக்கு சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் சனத் ஜெயசூரிய.
தான் கல்விகற்ற பாடசாலையான மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரிக்கு இன்று பாடசாலை சீருடையில் சென்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் பழைய மாணவர்களுக்கான நிகழ்வு ஒன்று இடம்பெறுகின்றது. இதில் கலந்து கொள்வதற்காகவே சனத் ஜெயசூரிய பாடசாலை சீருடையில் சென்றுள்ளார்.
இதில் பாடசாலை மாணவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதோடு, செல்பி எடுத்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதன்படி, அண்மையில் திலகரட்ன டில்சான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அங்கு ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.