FILE IMAGE
அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது சில அமைச்சர்கள் கபினட்டில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
கபினட்டில் இருந்து நீக்கப்படும் அமைச்சர்களை இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தமது அமைச்சு பொறுப்புகளை சரிவர கவனிக்காத அமைச்சர்களே இவ்வாறு கபினட்டிலிருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை , சில இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த பங்களிப்புகளை செய்த சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைய இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.