நபரொருவரைக் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஒன்பது பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி பிரதிவாதிகளை தலா 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பத்மினி என். ரணவக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இவர்கள் வௌிநாடு செல்லவும் நீதிமன்றம் இதன்போது தடை விதித்துள்ளது.
தெமட்டகொடை பகுதியில் வைத்து ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டர் வாகனத்தில், நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டது.
இதனையடுத்து, ஹிருணிகா உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.