சிரியாவில் நள்ளிரவு வேளையில் போர் விமானங்கள் குண்டு மழை!

201609211310115334_air-raid-kills-several-medical-workers-insurgents-near_secvpfபோர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள சிரியாவில் நள்ளிரவு வேளையில் அடையாளம் தெரியாத போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 4 டாக்டர்களும், அரசுக்கு எதிரான போராளி குழுவினரும் பலியானதாக தெரியவந்துள்ளது.

சிரியாவின் அலெப்போ நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கான் தவுமான் பகுதியை அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிரான ’ஜைஷ் அல்-பட்டா’ போராளிகள் கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் நேற்று  நள்ளிரவு வேளையில் அடையாளம் தெரியாத போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 4 டாக்டர்களும், அரசுக்கு எதிரான போராளி குழுவினரும் பலியானதாக அங்குள்ள போர் கண்காணிப்பு முகமை தெரிவித்துள்ளது.

பலியான டாக்டர்கள் அனைவரும் மருத்துவ சேவை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேச தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விமான தாக்குதலை நடத்தியது யார்? என்பது தெளிவாக தெரியாத சூழலில் ரஷியா அல்லது சிரியா நாட்டு விமானப் படைகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.