ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச ரீதியில் மிகப் பெரிய வரவேற்பு :மங்கள

14333195_10154382936776327_4477337127635532303_nஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொதுச் சபைக் கூட்டம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் மேலும் முன்னோக்கி செல்ல கிடைத்துள்ள வாய்ப்பு என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

நியூயோர்க் சென்றுள்ள அவர் அங்கிருந்து மேலும் கருத்து வௌியிடுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச ரீதியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தலைமையில், நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 26ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

10 வருடங்களாக ஐநா பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் பான் கீ மூன் தலைமையில் நடைபெறும் இறுதி பொதுச் சபைக் கூட்டம் இதுவாகும். இதனை தவிர குடியேற்றவாசிகள் தொடர்பான மாநாடும் இடம்பெறவுள்ளது. 

இந்த மாநாடு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நடைபெறவுள்ளது. 

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உரையாற்ற உள்ளதுடன் அவர் உரையாற்றும் இறுதி மாநாடு இதுவாகும். 

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 21ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற உள்ளமை விஷேட அம்சமாகும்.