ஒலுவில் மக்கள் சிலரின் அழைப்பின் பேரில் மாகாண அமைச்சர் நஸீர் ஒலுவில் கடலரிப்பை பார்வையிடச் சென்றுள்ளார்.இவர் தன்னுடன் பிரதேச செயலாளரையும் அழைத்துச் சென்றுள்ளார்.இதன் போது ஒலுவில் மக்கள் தடைகளை ஏற்படுத்தி இதற்கொரு தீர்வு சொல்லிவிட்டே செல்ல வேண்டுமென்ற மிகவும் இக்கட்டான நிலைமைக்கு மாகாண அமைச்சர் நஸீரை தள்ளியிருந்தார்.இதன் போது அங்கிருந்து மாகாண சபை உறுப்பினர் நஸீர் தப்பிக்கும் முகமாக உடனடியாக கல் கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பூராகவும் இரண்டு டிரம் ட்ரக் கல் கொட்டப்பட்டிருந்தமை இதனை தெளிவாக்குகிறது.இது தொடர்பில் மாகாண அமைச்சர் நஸீர் தனது முக நூலில் 18.09.2016ம் திகதி 10.58 மணிக்கு பதிவிட்ட பதிவில் தான் குறித்த பிரதேசத்தில் கற்களை இட்டு பிரச்சினை முற்றுப்பெற்று விட்டதாக பதிவிட்டிருந்தார்.19.09.2016ம் திகதி 00.29 மணிக்கு இப் பதிவு அப்படியே முதற்கட்ட வேலை என மாற்றப்பட்டிருந்தது.
அதன் பிறகு இன்று மாகாண அமைச்சர் நஸீர் ஒரு ஜே.சி.பி யை கொண்டு சென்று வெளிச்ச வீட்டிற்கு அண்மையில் இருந்த பாதையில் கற்கள் கொட்டப்பட்ட சிறிது செப்பனிடப்பட்டிருந்தது.முற்றுப் பெற்ற விடயம் எப்படி முதற்கட்ட வேலையாக மாறும் என்று சிந்தித்தாலே அதில் புதைந்துள்ள பல மர்மங்களை அறிந்துகொள்ளலாம்.மக்கள் இடைமறித்த விடயத்தை திசை திருப்பும் முயற்சியா? என்ற வகையில் சிந்தித்தால் இலகுவில் விடையைப் பெறலாம்.மாகாண சபை உறுப்பினர் நஸீர் உண்மையில் சிறந்த பண்பும் சமூக அக்கறையும் கொண்டவர் என்பதால் இப் பகிர்வை மிகவும் கவலையுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.