மறைந்த மாமனிதர் மர்ஹும் அஸ்ரப் அவர்களின் நினைவுதினம் கடந்த பதினாராம் திகதி தாமைரைத் தடாகத்தில் தடந்து முடிந்தது.
ஆனால் அங்கு தடந்த நிகள்வுகள் தலைவரை நினைவுகூர்ததை விட அங்கு வந்தவர்கள் தன்னைத்தான் அழங்காரப்படுத்துவதிலும் முன்னிலைப்படுத்துவதிலுமே கவனம் செலுத்தினார்கள் என்பதில் மிகையாகது.
அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் கிராத் போட்டி மற்றுமே ஓர் சிறப்பம்சத்தைக்கொன்டது.
மற்ற நிகழ்வுகள் எப்படி நடந்தேரியது என்பதையும். அங்கு சமுகமளித்தவர்களில் எத்தனை பேர் இந்த கட்சியை வழர்ப்பதற்கு பாடுபட்டவர்கள் என்பதையும் இன் நிகழ்வுக்குச் சென்றவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.
இதில் முக்கியமான விடயம் என்னவெனில் கிழக்கிலே ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி இன்று இதை மறந்து செயற்படுவதுதான் வேதனையளிக்கின்றது.
தலைவர் அவர்களின் நினைவுதின நிகழ்வை அவருக்குப் பேருத்தமான வகையில் அல்லாஹ்வும் ஏற்றக்கொள்ளும் வகையுலும் தடத்தியிரிக்களாம்.
ஆனால் அன்டயதினம் அந்த நிகழ்வு நடைபெற்ற தாமரைத்தடாகம் ஒரு களியாட்ட விடுதியைப்போல் காட்சியலித்தது.
இந் நிகழ்வுக்கும் அந்த நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கும் செலவு செய்த பணத்தை இல்லாத எழைக்கிராமத்தில் ஏற்பாடு செய்து ஒரு தியாலம் உண்பதற்க்கு உணவு சமைத்துக் கொடுத்திரிக்களாம்.
சென்ற ஹஜ்ஜுப் பெருநாளைக்கு துனியடுக்காத சமைக்காத எத்தனையோ ஏழைகள் இரிக்கின்றார்கள். அவர்கள் சாப்பிட்டுவிட்டு அல்ஹம்துலில்லாஹ் சொன்னால் அது எவ்வளவு நன்மை பயர்க்ககூடிய விடயம்.
எனவே இனியாவது இந்தக்கட்சி இப்படியான தவறுகளை விடாமல் இக்கட்டசியை வழர்க்கப் பாடுபட்ட போராளிகள். இந்த கட்சிக்காக நோன்பிருந்த தாய்மார்கள். இக் கட்சியை நேசிக்கின்ற தொண்டர்களின் அபிலாசைகளை மனதில் கொள்ளுங்கள்.
இக் கட்சி கோட்டுச் சூட்டுப் போட்டவர்களால் வழர்க்கப்பட்ட கட்சியல்ல. மாறாக ஏழை எளியவர்களின் உதிரத்தை நீராய்ப் பாச்சி வழர்க்கப்பட்ட கட்சி இது…. ஆனால் இக்கட்சிக்காக கஸ்டப்பட்ட ஆரம்ப்ப போராளிகளைக் கானக் கிடைக்காதது மனவேதனையன விடயமாகவுள்ளது.
ஏ.சி.நியாஸ்