இன்று பத்திரிகைகளில் பரவலாக பேசப்படும் விடயம்தான் சுயநிர்ணயம் சமஷடி சுயாட்சி தனி அலகு மாகாணம் மாவட்டம் ஆகும். இவற்றுக்கு பல விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் முஸ்லிம்கள் தனி இனம் என்பதில் எந்த மாறுபட்ட கருத்துக்கும் இடமில்லை. சுயாட்சி என்பது ஒரு புதிய விடயமல்ல. இதனை முதன் முதலில் இலங்கை தீவில் கேட்டவர்கள் தமிழர்களோ முஸ்லஸம்களோ அல்ல. கண்டி இராஜிய சிங்களவர்களே பிரித்தானிய அரசிடம் 1927ம் ஆண்டு டெனமூர் யாப்பு எழுதப்படும் போது கேட்டனர். இதனை தொடர்ந்து வந்த சட்டசபை தேர்தலுக்கு முஸ்லிம் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு பிரித்தானிய அரசு அனுமதித்து முஸ்லிம்கள் தனி இனம் என்பதை அங்கிகரித்தனர். அன்றும் தமிழ் தரப்பினர் முஸ்லிம்கள் தமிழ் பேசும் தமிழினம் என்பதனை அன்றய தலைவர்கள் உடைத்தெறிந்தனர். அதற்கமைவாக முதலாவது சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முஸ்லிம் பிரதிநிதியை அனுப்பக்கூடிய நிலை ஏற்பட்டது. எனவே கிழக்கு மண்தான் முஸ்லிம் சுயநிர்னயத்தை அங்கிகரிக்கும் தகுதியுடைய பிரதேசமாகும். இதேபோன்ற இன்னுமொரு நிகள்வுதான் மு.கா. ஆரம்பிக்கப்படுவதற்கும் முதலன்டு இரவு நடைபெற்ற தமிழ் தரப்புடனான பேச்சுவார்தையில் ஏற்பட்ட தோல்வி. இதன் விளைவுதான் மு.கா. ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது.
1961ம் ஆண்டு அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது இருந்த கிழக்கல்ல இப்போது உள்ள கிழக்கு. எமது சயநிர்ணயம் சரித்திர ஆதாரங்களுடனயே முன்வைக்கப்படுகின்றது. ஆம்பாரை மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருத்து பிரித்தது இங்குள்ள தமிழ் பேசும் மக்களின் நிர்வாகத்தை இலகுபடுத்துவதற்காகும். ஆனால் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. அதேபோன்று ஜந்தில் ஆறு பேரும்பான்மையை கொண்ட ஜ.தே.க 1983ம் ஆண்டு கொண்டுவந்த புதிய பிரதேச சபை சட்டமூலத்தின் மூலம் எல்லை நிர்ணய சபை அமைக்காமல் வரையப்பட்டது. அன்று அங்கிருந்த முஸ்லிம் தலைவர்கள் வாய்மூடி மௌனமாக இருந்தனர். இவைகளை சொல்லி சொல்லிதான் மு.கா. வளர்க்கப்பட்டது. மு.கா. ஆரம்பிக்கப்பட்ட போது பாஷh இல்லத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் எமது பார்வை என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக இனப்பிரச்சினைக்கான தீர்வினை மறைந்த தலைவர் முன்வைத்தள்ளார்.
சிறுபான்மை கட்சிகளில் முதன்முறையாக தெளிவான தீர்வை முன்வைத்த கட்சி மு.கா. என்பதை யாரும் மறுக்க முடியாது. மறைந்த தலைவர் மூண்று தெரிவுகளை தெளிவாக முன்வைத்துள்ளார். ஆனால் அதனைக்கூட சொல்ல முடியாத நிலையில் இன்றைய தலைவர் உள்ளார். இதற்கு காரனம் நாம் அரசுடன் இருப்பதே. அரசுடன் இருக்கும் போது நாம் எதனையும் பெற முடியாது.
எமது கட்சி ஆரம்பிக்கப்படும் போது எமக்குரிய இலக்கு கட்சியின் நோக்கம் அதன் பாதை என்பன மிகத் தெளிவாக கூறப்பட்ட போதிலும் தலைவரின் மறனத்தின் பின்னர் படிப்படியாக அது குறைவடைந்து நழிவடைந்து இன்று இல்லாமல் போய்விட்டது. கட்சியின் யாப்பே திருட்டுத்தனமாக மாற்றப்பட்டு விட்டது கட்சியின் உறுதியே திருட்டுத்தனமாக மாற்றப்பட்டு விட்டது இவ்வாறு செய்தவர்கள் எவ்வாறு எமது சமுகத்தின் விடியலை பெற்றுத்தருவார்கள் என்பதை மாத்திரம் சிந்தித்து எதிர்வரும் காலங்களில் இந்த சமுகத்திற்கு விடியலை தேடித்தரக்கூடியவர்hளை மாத்திரம் இந்தமன்னில் உள்ள மகானை பாராளுமன்றத்திற்கு அனுப்பி எமது பிரதேசத்தின் தேவைப்பாடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். இக்காலகட்டம் மிகமுக்கியமானது எனவே நாம் பகிரங்கமாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும் முஸ்லிம் தேசிய அமைப்புக்குள் உட்படுத்தி எமது சமுகத்தின் பிரச்சினைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல எங்களுக்கு உங்களின் ஒத்துளைப்பை தருமாரு கேட்டுக்கொள்கிறோம்.