பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நியூஸிலாந்துக்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை இந்த விஜயம் அமையவுள்ளதாக நியூஸிலாந்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமரின் இந்த விஜயத்தின் போது நான்கு அமைச்சர்களும் இலங்கையின் வர்த்தகர்கள் குழுவொன்றும் கலந்து கொள்ள உள்ளனர்.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்பதற்கான எதிர்பார்ப்பில் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.
இலங்கைப் பிரதமர் ஒருவர் நியூஸிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்த விஜயம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெறும் என்றும் நியூஸிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் நியூஸிலாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமையும் கூறத்தக்கது.