பசு தோல் போற்றிய இன்றைய SLMC

 

ashraff raff hakeem slmc

 

பசு தோல் போற்றிய இன்றைய SLMC

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சிறிலங்கா முஸ்லீம் காங்ரஸ் தலைவர் அஸ்றப் அவர்கள் உயிருடன் இருக்கின்ற போது அக்கட்சி கூடுதலான பாராழுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த காலகட்டத்தில் (SLMC யின் உச்ச காலகட்டத்தில்) சில ஊர்கள் UNP யுடன் இருந்தன. உதாரணம் நிந்தவூர், பொத்துவில் போன்ற பிரதேச சபைகளின் ஆட்சி UNP இன் கையில்.

01. SLMC யின் உச்ச காலகட்டத்தில், முஸ்லீம்கள் மத்தியில் இருந்த UNP ஆதரவாளர்கள் இப்போ எங்கே ???

02. அதே நேரம் SLMC யின் உச்ச காலகட்டத்தில், SLMC யில் இருந்த உறுப்பினர்களில் அனேகர் (90%) இப்போ எங்கே ???

#1. அன்று முஸ்லீம்கள் மத்தியில் இருந்த UNP ஆதரவாளர்கள் இன்று SLMC யில் இருக்கின்றன.

உதாரணம் நிந்தவூர், பொத்துவில் போன்ற பிரதேச சபைகளின் ஆட்சி இன்று SLMC இன் கையில்.

#2. அதே நேரம் அன்று (SLMC யின் உச்ச காலகட்டத்தில்) இருந்த SLMC உறுப்பினர்களில் (முஸ்லீம்கள்) அதிகமானோர் அதாவது SLMC இன் தோற்றுவாயில்கள் இன்று அக்கட்சிக்கு வெளியே உள்ளனர்.

எனவே இன்று, சிறிலங்கா முஸ்லீம் காங்ரஸ் காரர்கள் என்று கூறுபவர்கள் யார் ? அன்று தலைவர் அஸ்றப் உயிருடன் இருக்கும் போது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இன்று தலைவர் அஸ்றப் மறணித்ததன் பின்பு அவரது கட்சியில் இணைந்த மகுலாஇஸ்லாமியர்கள்.

இப்படிப்பட்டவர்கள் மிம்பர்கள், சபைகளில் கதைக்கின்ற கதைகளை கேட்கிண்ற போது சிரிப்பதா அழுவதா……….

தலைவர் அஸ்றப் உயிருடன் இருக்கும் போது நாட்டின் நிலமை, முஸ்லீம்களின் நிலமையை யோசித்து அன்று அக்கட்சியில் சேராதவன் இன்று அதில் சேர்ந்து உன்மையான முஸ்லீமை மகுலாஇஸ்லாம் துரத்திவிட்டு மகுலாஇஸ்லாம் இன்று வேதம் ஓதுகிறதை கேட்கவேண்டிய சோதனையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

அன்று தலைவர் அஸ்றப் இருக்கின்றபோதே பேரினவாத கட்சி ஒன்றினால் போடப்பட்ட திட்டம் இன்று உருப்பெற்று காணப்படுகிறது.

இதன் மூலம் அப்பேரினவாத கட்சியானது முஸ்லீம்கள் மத்தியில் உள்ள வாக்குகளுளைப் பெறுவதற்கு அதிக சிரத்தை எடுக்க தேவையில்லை. ஓரிருவரைப்பிடித்தால் போதும். ஏனனில் SLMC யும் அவர்களது கட்சியே.

மற்றொருவனின் வளவை ஆக்கிரமித்து கள்ள உறுதி முடித்து (கபளிகரம் செய்து) வைத்துக்கொண்டு உன்மயான வளவுக்காரன் வெளியேறவே அவ்வளவின் மரத்தில் குரங்குகள் ஊஞ்ஞலாடுகின்றன.

இன்று SLMC கட்சியை UNP ஆக்கிரமித்து விட்டது மட்டுமன்றி உன்மையான அன்றைய SLMC யின் பிரதிநிதிகள் இன்று அக்கட்சிக்கு வெளியே வேறு கட்சிகளில் உள்ளனர் என்பத பாமர முஸ்லீம்கள் அறியாது மரச்சின்னத்துக்கும், அக்கட்சியின் பெயருக்கும், ஆதவன் எழுந்து வந்தான்………..என்ற பாட்டுக்கும் (குடுவுக்கு ஆட்பட்டவன் போன்று ) மயங்கி கிடக்கின்றனர். இதனால் தான் அம்பாறை மாவட்டத்தில் அச்சின்னத்துக்கு 3 பிரதி நிதிகள் கிடைத்து வருகின்றன.

இது இன்றைய SLMC யின் அதிஉயர்பீட உறுப்பினர்களில் அனேகருக்கு நன்றாக தெரிந்த விடயம். சிலரைத்தவிர. பாவம் அம்பாரை மாவட்ட பாமர முஸ்லீம் வாக்காளர்கள்.