இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

india-sri-lankaஹம்பாந்தோட்டை மாவட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது. 

இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே. சிங்கா உள்ளிட்ட பிரதிநிதிகளும் இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டவர்களும் நேற்று (15) உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். 

இதன் கீழ் 300 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் மீனவ மற்றும் விவசாய துறையில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. 

சுமார் 70,000 மீனவர்கள மற்றும் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று மீன்பிடி அமைச்சு கூறியுள்ளது.