தான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழப்பு – 200 பேர் காயம்

தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

வடமேற்கு தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின. விக்டோரியா ஏரி அமைந்து உள்ள பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக புகோபாவில் வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் 13 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்த 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்போது அங்கு அமைதி நிலவுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் நாட்டின் தலைநகரில் எந்தஒரு பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கமானது ருவாண்டா, உகாண்டா மற்றும் கென்யாவிலும் உணரப்பட்டது என்று அமெரிக்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.