நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் இழப்பீடு கோரி தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சட்டவிரோதமாக தன்னை கைது செய்து, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி, தன்னை சிறையில் அடைத்ததாக நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
றக்பி விளையாட்டுக்காக இந்தியாவின் கிறிஸ் நிறுவனம் வழங்கிய பணத்தை செலவிட்டதாக உறுதியாகி உள்ள நிலையில், அதனை கவனத்தில் கொள்ளாது, நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தி தன்னை கைது செய்தமைக்கு இழப்பீடு கொடுக்கவில்லை என்றால், வழக்கு தாக்கல் செய்ய போவதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வழக்கில் தன்னை இரண்டு முறை கைது செய்து நீதிமன்றம் ஊடக சிறையில் அடைத்தமைக்கு எதிராக நாமல் ராஜபக்ச, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் ஒரு அதிகாரியிடம் தலா 100 மில்லியன் இழப்பீட்டை கோரியுள்ளார்.