முன்னாள் காவல்துறை மா அதிபர் மஹிந்த பால சூரியவிடம் விசாரணை

முன்னாள் காவல்துறை மா அதிபர் மஹிந்த பால சூரியவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவினால் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.

 
முன்னாள் காவல்துறை மா அதிபர்  அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச, கட்சியின் பேச்சாளர் முஹமட் முசாம்மில், கட்சி உறுப்பினர்களான அன்சான் உம்மா, வீரகுமார திஸாநாயக்க, நிமால் பிரேமவன்ச உள்ளிட்ட சிலருக்கு சட்டவிரோதமான முறையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கியதாக மஹிந்த பாலசூரிய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.