எந்தவொரு தேர்தல் சவாலையும் எதிர்கொள்ள கூட்டு எதிர்க்கட்சி தயாராகவுள்ளதாககூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனதெரிவித்துள்ளார்.
இன்று ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்கத்தின் தலைவர்கள் நாட்டை வழிநடத்த முடியாமல் பயந்து போய் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தலைவர்கள் காலையில் சொல்வது வேறு, மாலையில் சொல்வது வேறு.
எனவேதான் இன்றைய ஆட்சி நிலையில்லாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கூட்டு எதிர்க்கட்சி எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்கதயாராகி விட்டதாகவும், அரசாங்கம் குறைந்தது கிராம ரீதியிலான தேர்தலையாவது நடாத்துமாறு அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிதஅபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.