மர்ஹூம் அஷ்ரபின் மரணமும் , ஹக்கீமின் மௌனமும் !

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் இறையடி எய்து 16 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அந்தத் தலைவருக்கு என்ன நடந்தது.அவரது மரணம் விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என்ற விடயங்கள் இன்னும் நாட்டு மக்களுக்குத் தெரியாத நிலையில் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் ஆறாத புண்ணாய் இருந்து கொண்டிருக்கின்றது.

ashraff raff hakeem slmc

மறைந்த தலைவரின் மரணத்தின் பின்னணியில் விடுதலைப்புலிகள்; மற்றும் அப்போதைய காலகட்டத்தில் முக்கிய அமைச்சராக இருந்த ஒருவரினது பெயர்களும் சந்தேகத்தின் பேரில் அடிபட்டு வந்ததுன. சந்தேகம், சாட்சியமெல்லாம் ஒரு பக்கம் இருக்க தலைவருடய மரணம் குறித்து நடாத்தப்பட்ட விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு தற்போதையத் தலைவர் றவூப் ஹக்கீமிடம் முஸ்லிம்களால் தார்மீக் ரீதியில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அஷ்ரப் பாடல்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்த ஹக்கீம் கடந்த 16 வருடங்களில் சந்திரிகா, ரணில், மஹிந்த மைத்திரி என நான்கு தலைவர்களின் அமைச்சரவையில் நீதி அமைச்சர் உட்பட 07,08 அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ளார். இருப்பினும் தனது தலைவனுக்கு ஏற்பட்ட மரணம் எப்படிப்பட்டது என்பததைக் கண்டறிய முடியாத அளவுக்கு சுயநலவாதி.

இதற்கு மத்தியில்தான் முஸ்லிம் சமூகத்தின் குரலாக இருப்பதாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றார். ஏதிர்வரும் 16 ஆம் திகதிக்கு  முன்னராவது தலைவர் அஷ்ரப் மரணம் தொடர்பில் ஹக்கீம் முஸ்லிம்களுக்கு விளக்குவாரா?

Hageem fmain 

0 0 votes
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
மூதூர் மக்கள் மன்றம்
மூதூர் மக்கள் மன்றம்
8 years ago

டேய் துரோகி..,எனது போட்டோ குரல் கவிதை எல்லாவாற்றையும் பயன்படுத்தி கிழக்கானை மடயனாக்கி வாரும் நீ எனக்கு என்ன ஆனது என்று பார்த்தாயா.இப்படியே 16 வாருடாங்களை ஓடைட்டிவிட்டாய்.இத்தோடு நிறுத்திக் கொள்