எல்லா பொறுப்புக்களையும் அதிபர், ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டு கண்கானிக்க முடியாது

பைஷல் இஸ்மாயில் 

 

 மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் மட்டுமல்ல அவர்களின் ஏனைய செயற்பாடுகளிலும் பெற்றோர்கள் மிகக் கூடுதலான கவனம் செலுத்தவேண்டும் என பாத்திமா மகளிர் இஸ்லாமிய அரபிக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் என்.எம்.அப்துல் ஹலீம் மௌலவி கூறினார்.

அட்டாளைச்சேனை பாத்திமா மகளிர் இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான கூட்டம் இன்று (08) குறித்த கல்லூரியில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

haleem_fotor

இன்று உலகத்திலுள்ள அனைவரும் இலத்திரனியல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழலில்தான் நாமும் எமது பிள்ளைகளும் வாழ்ந்து வருகின்றோம். எமது பிள்ளைகளை மார்க்கப்பற்றுள்ள பிள்ளைகளாக பாதுகாப்பது என்பது மிகக் கடினமானதொரு விடயமாகும்.

எமது கண்களை நாம் எவ்வாறு பாதுகாப்போமோ அதைவிட மிகக் கவனமாக எமது பிள்ளைகளை நாம் பாதுகாக்கவேண்டும். இவ்வாறு இருந்தும் கூட சில சந்தர்ப்பங்களில் சில தவறுகள் இடம்பெறத்தான் செய்கின்றன. அதிலிருந்தும் நாம் எமது பிள்ளைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளைச் செய்யவேண்டும்.

மாணவர்களின் விடயங்களில் முற்று முழுதான எல்லா பொறுப்புக்களையும் அதிபர், ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டு கண்கானிக்க முடியாது. பெற்றோர்களும் இதில் அரைவாசி பொறுப்புக்களை ஏற்றால் மாத்திரமே எமது மாணவச் செல்வங்களை ஒரு சிரான மார்க்க அறிவுள்ள சிறந்த மௌலவிகளாக உறுவாக்குவதுடன் எதிர்காலத்தில் நல்ல மார்க்கப்பற்றுள்ள உலமாக்களை உறுவாக்க முடியும்.

எமது மாணவர்களின் அன்றாட செயற்பாடுகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் நல்லதொரு மார்க்கப்பற்றுள்ள சிறந்த மௌலவிமார்களை உறுவாக்க முடியும் என்றார்.