பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் வாகனத்தை தீர்வையற்ற அனுமதிப்பத்திரம் மூலம் இறக்குமதி செய்ய முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் நாமலின் வாகனம் மீட்கப்பட்டிருந்தது. இந்த வாகனத்தை தீர்வையற்ற அனுமதிப்பத்திரத்தின் ஊடாக இறக்குமதி செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாகனக் கொள்வனவு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அவர் வாகனத்தின் சந்தைப் பெறுமதி எவ்வளவு என்பதனை விடவும் இதற்காக ஒன்றரை கோடி ரூபா வரி செலுத்த வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.