மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்கு பயங்கரவாதம் காரணம் அல்ல:

bb6f7_1mdb_nor0907d_620_437_100மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமைக்குபயங்கரவாதம் காரணம் அல்ல இலங்கையின் அரசியல் வித்தியாசங்களே எனமலேசியாவின் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்Datuk Nur Jazlan Mohamed தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது. 

இலங்கையின் அரசியல் நிலைமைகள் காரணமாகவே இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும், இந்த தாக்குதல் இலங்கை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார். 

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீதுமேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் நேற்றைய தினம் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை பாதிக்கும்செயலே இது எனவும் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் மேலும்குறிப்பிட்டுள்ளார். 

மலேசிய அரசாங்கம் இந்த தாக்குதலுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கைமுன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.