மலேரியா நோய் முற்றிலும் இல்லாதொழிக்கப்பட்ட நாடு இலங்கை..!

who-logo1

மலேரியா நோய்  முற்றிலும்  இல்லாதொழிக்கப்பட்ட நாடு  இலங்கை என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்.ஓ.) அறிவித்துள்ளது.
மலேரியா மிகப்பரவலாக காணப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து மலேரியாவை முற்றிலும் ஒழித்த சாதனையை இலங்கை நிiலாட்டியிருக்கிறது என்றும் உலக சுகாதார அமைப்பு பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.
நுளம்புகளினால்   பரவும் மலேரியா   உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் நோய் என்றும் 1970ம் , 80-ம் ஆண்டு காலப்பகுதிகளில்   மலேரியாவின் தாக்கம் தீவிரமாக இருந்த வேளையில்  இலங்கை அரசு மேற்கொண்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளின் காரணமாக மலேரியாவைப் பரப்பும்  நுளம்புகளின் பெருக்கம்  குறைக்கப்பட்டு  மலேரியா நோய்  முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்த உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர்  கலாநிதி  பூனம் கேத்ரபால் சிங், ‘இலங்கையின் குறிப்பிடத்தக்க சாதனை இது’ என்றார்.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, நேபாளம், இந்தோனேசியா, வங்கதேசம், கொரியா உட்பட 11 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.