முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மலேஷிய விஜயத்தை நிறைவு செய்துவிட்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
இதேவேளை, நாளை மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பிரிதொரு அணியாக செயற்பட அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாடு திரும்பிய மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
இதன்போது, மலேஷிய உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதைப் போன்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள மலேஷியாவுக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த நாட்டிலுள்ள தமிழர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்றையதினம் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அந்த நாட்டு விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.