ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது ஜனாதிபதி மைத்திரிபாலவின் தலைமைத்துவத்தின்கீழ் எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்க தயாராகவுள்ளதாக அமைச்சரும், ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சியின் செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று குருநாகலில் இடம்பெற்று வரும் கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழாவில்கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று கட்சியானாது தகுதியான, சிறந்த ஒருவரின் கையில் கிடைத்துள்ளதாகவும், எனவேஎந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்கும் ஆற்றல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குஇருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற போது அதை சிலரால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் போனதற்கான காரணம் அந்த ஆதரவு அவர்களுக்கு கிடைக்காமையே என்றும்தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவருமே ஜனாதிபதிக்கு நன்றிக் கடன் பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர் நாம் இன்று இன, மத, ஜாதி பேதங்களைக்கடந்து ஒன்றிணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.