கோதபாய ராஜபக்ஸ ஜனாதிபதியை சந்தித்தார் ?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இரகசியமான முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மிலிந்த மொரகொட இந்த சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை நிறுத்திக் கொள்ளுமாறு கோதபாய இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 
அவ்வாறு விசாரணைகள் நிறுத்தப்பட்டால் ராஜபக்ஸ குடும்பத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் இந்த கோரிக்கைகளை ஜனாதிபதி செவி மடுத்த போதிலும் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன