ஜெய­ல­லி­தாவின் ஆட்சி மீண்டும் தலை தூக்­கி­யுள்­ளதால் இலங்­கையில் விடு­தலைப் புலிகள் மீள தலை­ தூக்கும் ஆபத்து உள்­ளது!

Jathika-Hela-Urumaya-symbol_0

தமி­ழ­கத்தில் ஜெய­ல­லி­தாவின் ஆட்சி மீண்டும் தலை தூக்­கி­யுள்­ளதால் இலங்­கையில் விடு­தலைப் புலிகள் மீள தலை­ தூக்கும் ஆபத்து உள்­ளது. எனவே அர­சாங்கம் பாது­காப்பை பலப்­ப­டுத்த வேண்­டு­மென ஜாதிக ஹெல உறு­மய வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

 

முள்­ளி­வாய்க்­காலில் சுட­ரேற்­றுவோர் விடு­தலைப் புலி­க­ளையே நினைவு கூரு கின்­றனர். இதற்கு அரசு தடை­வி­திக்க வேண்­டு­மென்றும் அக்­கட்சி தெரி­வித்­தது.

பத்­த­ர­முல்­லையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே ஹெல உறு­ம­யவின் ஊடகப் பேச்­சா­ளரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

ஒவ்­வொரு வரு­டமும் யுத்தம் முடி­வுற்ற மே 19 ஆம் திகதி வடக்கில் சிலர் இறந்த விடு­தலைப் புலி­களை நினைவு கூர முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றனர். யுத்­தத்தில் தமது கண­வன்மார் பிள்­ளைகள் மற்றும் உற­வி­னர்­களை இழந்­த­வர்கள் அவர்­களை நினைவு கூர்ந்து தீப­மேற்­று­வதை தடை­செய்ய வேண்­டு­மெனக் கூறு­வில்லை. அது நியா­ய­மா­னது. தத்­த­மது வீடு­களில் உற­வி­னர்­களை நினைவு கூரலாம்.

ஆனால் முள்­ளி­வாய்க்­காலில் தீப­மேற்றி நினைவு கூற வேண்­டி­யது அவ­சி­ய­மில்லை. 3 இலட்­சத்­திற்கும் மேலான தமிழ் மக்­களை பலாத்­கா­ர­மாக புலிகள் பணயக் கைதி­க­ளாக வைத்­தி­ருந்த இடமே முள்­ளி­வாய்க்கால் ஆகும்.

எனவே அங்கு தீப­மேற்­று­வது விடு­தலைப் புலி­களை நினைவு கூரு­வதே ஆகும். புலிகள் இயக்கம் தடை­செய்­யப்­பட்ட இயக்கம். எனவே அவர்­களை நினைவு கூருவது சட்ட விரோ­த­மாகும். இதனால் முள்­ளி­வாய்க்­காலில் தீப­மேற்­று­வதை தடை­செய்ய வேண்டும்.

தமிழ் மக்­களை இரா­ணு­வத்­தி­னரே மீட்­டெ­டுத்­தனர். எனவே அவர்­களை நினைவு கூர்ந்து தான் தீப­மேற்ற வேண்டும். தமிழ் மக்­களை அழித்த பிர­பா­க­ர­னுக்கு சாபம் வழங்க வேண்டும்.

தமிழ் நாட்டில் மீண்டும் ஜெய­ல­லிதா முத­ல­மைச்சர் பத­வியில் அமரப் போகிறார்.எனவே அங்கு மீண்டும் விடு­தலைப் புலி ஆத­ரவு தலை­தூக்கும், பிரி­வி­னைக்கு ஆத­ரவு உருவாகும்.

ஜெயலலிதா மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளை முன்னெடுப்பார்.எனவே அரசாங்கம் பாதுகாப்பை உஷார்படுத்த வேண்டுமென்றும் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்தார்.