கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவியேற்க காத்திருப்பவருக்கு மு.கா வைக்கவுள்ள ஆப்பு !

SLMC N THAVAM rauff hakeem_Fotor

 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீருக்கு அதாவது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அட்டாளைச்சேனைக்கு பாராளுமனற தேசியப்பட்டியலும் மாகான சபை உறுப்பினராக இருக்கின்ற திருகோணமலை மாவட்ட புல்மோட்டை அன்வருக்கு கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சு பதவியும் வழங்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. 

இவ்விடயம் சம்பந்தமாக கேட்றிந்து கொள்வதற்காக தற்போதைய கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சரான அட்டாளைச்சேனையை சேர்ந்த நசீரிடம் வினவிய பொழுது அட்டாளைச்சேனை மக்கள் எப்பொழுதும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் போராளிகளாகவே இருந்து வருகின்றனர். அத்தோடு காலத்திற்கு காலம் முஸ்லிம் காங்கிரசின் வாக்குவங்கிகள் சகல பிரதேசங்களிலும் கூடிக் குறைந்து வருக்கின்ற நிலையில் அட்டாளைசேனை மட்டுமே முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக மட்டுமல்லாமல் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்த காலத்திலிருந்தே தலைமைத்துவத்திற்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்து வருக்கின்ற பிரதேசமாகும்.

அந்த வகையிலே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியலினை வழங்கி கெளரவிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அதே நேரத்தில் கிழக்கு மாகாண சுகாதர அமைச்சினை எனக்களித்து அட்டாளைச்சேனையை கெளரவப்படுத்திய எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான அப்துர் ரவூப் ஹக்கீம் எடுக்கின்ற எந்த முடிவுகளையும் நாங்கள் அவர் கட்சியின் தலைமை என்ற வகையில் கெளரவப்படுத்தி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர்.

அதே நேரத்திலே முஸ்லிம் காங்கிரசின் கட்சியின் தலைமைக்கும் கட்சிக்கும் எதிரான கிழக்கின் எழுச்சி என்று பெயரிலே ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டு எதிர்கட்சிகளின் போராட்டங்களில் இருந்து கட்சியினையும் கட்சியின் தலைமையினையும் பாதுகாப்பதற்காக மிக விரைவில் அட்டாளைச்சேனையை சேர்ந்த  சுகாதார அமைச்சர் நசீருக்கு தேசிய பட்டியல் வழங்கப்படலாம் என்பது அம்பாறை மாவட்ட அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் அதிரடியாக எடுக்க போகின்ற முடிவாக இருக்கலாம் என  ஊகிக்க கூடியதாக இருக்கின்றது.

அத்தோடு நசீர் அவர்களிடம் இருக்கின்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு பதவியானது புல்மொடையினை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வருக்கு வழங்கப்பட கூடிய சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் வாடாரங்களில் இருந்து அறியக் கிடைக்கின்றது. ஏன் என்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலின் பொழுது திருகோணமலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடுறுவல் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் காலகாலம் தக்கவைத்து கொண்டு வந்த தனது பாராளுமன்ற ஆசனத்தினை இழக்க நேரிட்டிமையானது திருகோணமலையில் முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்த பாரிய இளப்பாகவே பார்க்கப்படுகின்றது. 

அதனை  ஈடு செய்யும் முகமாகவும் மேலும் திகோணமலையினை அசைக்க முடியாத சிறீலங்கா முஸ்லிம் கோட்டையாக மாற்றுவதற்கும், கிழக்கின் எழுச்சியினை திருகோணமலையில் வாலாட்ட விடக்கூடாது என்பதற்காகவும் உடனடியாக அட்டளைச்சேனை நசீருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுமிடத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினராக உள்ள புல்மோட்டை அன்வருக்கு கிழக்கு மாகாண சுகாதர அமைச்சு பதவியானது வழங்கப்பட கூடிய அதிக வாய்ப்புக்கள் இருப்பதென்பதும் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களில் மட்டுமல்லாது திருகோணமலை மற்றும் புல்மொட்டை பிரதேசங்களில் அதிகம் பேசப்படக்கூடிய விடயமாக மாற்றமடைந்துள்ளதை அவதாணிக்க கூடியதாக இருக்கின்றது.

நன்றி-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்