திரைசேரி கடந்த 7 மாதத்திற்குள்  சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு வருமாணத்தைப் பெற்றுள்ளது : ரவி

அஷ்ரப்  ஏ சமத்
 
இவ்வருடத்தின் முதல் 7 மாதங்களுக்குள் சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு மூன்று திணைக்களங்கள் .இணைந்து பாரிய  வருமானத்தினைப் பெற்றுள்ளதாக நிதியமைச்சா் ரவி கருநாயக்க  28 ஆம் திகதி  அவரது அமைச்சில்  நடைபெற்ற கூட்டத்தில்  மேற்கண்ட தகவளைத்  தெரிவித்தாா்.
அமைச்சா் அங்கு தொடா்ந்து கருத்துத் தெரிவிக்கையில் –
111111
வரி அறவிடும் புதிய நடைமுறை பொறிமுறைத் திட்டத்தின் கீழ் இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை  ஹலால் திணைக்களம் ஆகிய மூன்று திணைக்களங்களும் இணைந்து மேற்கொண்ட வரி அறவிடுதல் புதிய திட்டத்தின் கீழ்  அரசாங்கத்திற்குச் கிடைக்க வேண்டிய  வரி முறையாக அறவிட்டதன் விளைவாக இவ் வருமானம்  கிடைத்துள்ளது . இவ் மூன்று திணைக்களங்களும் இனைந்தே  769,752 மில்லியன் ருபா  வருமானத்தினை பெற்றுள்ளன.  கடந்த ஆண்டு 625,867 மில்லியன் ருபாக்கள் மட்டுமே  வருமானம் ஈட்டிது.  இதில் மூன்று திணைக்களங்களில்  மேலதிகமாக 143,885 மில்லியன் ருபா, இலாபமீட்டியுள்ளன. இவ் வருமானம்  2016 ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஜூலை வரை காலப்குதியாகும்.    2015 ஆம்  ஆண்டினோடு  ஒப்பிடும்போது  23 வீதத்தினை 7 மாத காலத்திற்குள்  வருமானம் பெருகியுள்ளது.
இதில் இலங்கைச் சுங்கத் திணைக்ளம் இவ் ஆண்டின் 7 மாத காலத்திற்குள் 457,616 மில்லியன் ருபாவும்,  21.5 வீதமாகும், இலங்கை இறைவரித் திணைக்களம் கடந்த 7 மாத காலத்திற்குள்  191,596 மில்லியன் ருபாவில்் இருந்து 242,811 மில்லியன் பெருகியுள்ளது. இது  26 வீதமாகும்,  ஹலால் திணைக்களம் 57,276,மில்லியன் ருபா 21 வீதமாக பெருகியுள்ளது.  
 நிதியமைச்சின் புதிய வரி அறிவிடுதல் திட்டத்தின் கீழ் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக அறவிடுதலில் அதிகாரிகள் முறையாக மேற்கொண்டதால் இவ் வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சா் ரவி கருநாயக்க தெரிவித்தாா்.  .