வெளிநாட்டு நீதவான்கள் தொடர்பில் பான் கீ மூன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்

வெளிநாட்டு நீதவான்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

 
யுத்தக் குற்றச் செயல் விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு குறித்து பேசுவார் என பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பான் கீ மூனின் பேச்சாளர் Stéphane Dujarric இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 
இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கவே ஐக்கிய நாடுகள் அமைப்பு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை விஜயம் செய்யும் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.