அமெரிக்காவின் நீயூ ஜெர்சி நகருக்கு செல்ல வேண்டிய எயார் இந்தியா விமானம் இன்று கஜகஸ்தானில் வைத்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எயார் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.ஐ. 191 பயணிகள் விமானம், பயணிகளுடன் மும்பையில் இருந்து இன்று அதிகாலை 2.25 மணிக்கு அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி நகருக்கு புறப்பட்டது.
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் இருந்து தீ எச்சரிக்கை சமிக்ஞை திடீர் என ஒலித்ததால் முன்னெச்சரிக்கையாக விமானம் கஜகஸ்தான் நாட்டில் காலை 8 மணி அளவில் தரையிறக்கப்பட்டது.
கஜகஸ்தானில் அந்த விமானத்தை தீவிரமாக பரிசோதித்த நிபுணர்கள் திடீரென தீ எச்சரிக்கை கருவி சமிக்ஞை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
குறித்த தகவலை எயார் இந்தியா நிறுவனம் தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.
எவ்வாறான போதும் இன்னும் ஓரிரு மணிநேரத்தில் குறித்த விமானம் நியூஜெர்சியில் உள்ள நியூ ஆர்க் விமான நிலையத்துக்கு புறப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.