எத்­தனை இடை­யூறு வந்­தாலும் தாருல்­ஸ­லாத்தை மீட்­டெ­டுக்கும் எனது அமைதிப் போராட்டம் தொடரும்:பஷீர் சேகு­தாவூத்

செவ்­வாய்க்­கி­ழமை  நடை­பெற்ற  முஸ்லிம்  காங்­கி­ரஸின்  அர­சியல் உயர்­பீடக் கூட்­டத்தில்  நான் பேச  எழுந்­த ­போது சில உறுப்­பி­னர்கள் எழுந்து சப்­த­மிட்டு இடை­யூறு விளை­வித்­தனர். இது ஏற்­க­னவே  திட்­ட­மிட்டு  செய்­யப்­பட்­ட­தாகும்.

 எத்­தனை  இடை­யூறு வந்­தாலும் தாருல்­ஸ­லாத்தை மீட்­டெ­டுக்கும்  எனது   அமைதிப் போராட்டம் தொடரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில், தாருல்­ஸலாம்  தொடர்­பான ஊழல்கள் பற்றி நான் விளக்கம் கேட்­டி­ருந்­த­மை­ய­டுத்தே அர­சியல் உயர்­பீட கூட்­டத்தில்  கட்­சியின்  தலை­வ­ரினால்  விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

இல்­லையேல் விளக்கம் வழங்­கப்­பட்­டி­ருக்­க­மாட்­டாது. கட்­சியின்   தலைவர். நம்­பிக்கை நிதியம், UNITY BUILDERS (PVT) LTD,  சம்­பந்­தப்­பட்ட விட­யங்களில் கட்­சியின் ஈடு­பாடு என்­பன பற்றி விளக்­க­ம­ளித்தார். இதி­லுள்ள பிரச்­சி­னைகள், சிக்­கல்கள் பற்றி தெரி­யப்­ப­டுத்­தினார்.  அவர் புற விளக்­க­மொன்­றினை வழங்­கி­னாரே தவிர  அக விளக்­கங்­களை வழங்­க­வில்லை. 

தாருல்­ஸ­லாமில் உள்ள மறைந்த தலை­வரின் தனிப்­பட்ட  சொத்­துக்களை மீள கொடுப்­பது தொடர்­பாகவும் கூறப்­பட்­டது.  ஆனால் இர­க­சி­ய­மான ஆவ­ணங்கள்  இல்­லாமற் செய்­யப்­பட்­டமை உட்­பட எனது  பல கேள்­வி­க­ளுக்குப் பதில் வழங்­க­வில்லை.

இத­னை­ய­டுத்தே கூட்­டத்தில் நான் எழும்பி நின்று எனது கேள்­வி­க­ளுக்குப் பதில் வழங்­கப்­ப­ட­வில்லை, பதில் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றேன். 

இச்­சந்­தர்ப்­பத்­திலே திட்­ட­மிட்­டி­ருந்­த­படி கூலிக்­கு­மா­ர­டிக்கும் சிலர் எழுந்து சப்­த­மிட்­டனர். என்னை கேள்­விகள் கேட்­க­வி­டாது தடுத்­தனர். ஆனால் பெரும்­பா­லா­ன­வர்கள் பொறு­மை­யாக இருந்­தனர். சமூகம்  தாருல்­ஸலாம் தொடர்பில் அறிந்து  கொள்ள வேண்டும். தாருல்­ஸலாம் காப்­பாற்­றப்­பட வேண்டும்.

இதற்­காக  நான் இறு­தி­வரை போரா­டுவேன். கூச்சல்களால்  என்னைத் தடுத்து விட முடியாது என்றார். 

நான் கேள்விகள் கேட்டுவிடுவேன். அதனால் பிரச்சினைகள் ஏற்படுமென்று  தலைவர் ஸலவாத்துடன் கூட்டத்தை நிறைவு செய்து விட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.