முஸ்லிம்களை சிறுபான்மைக்குள் சிறுபான்மையாக்கி மண்டியிட வைக்க வேண்டுமா ? சபீஸ்

வடகிழக்கு இணைப்புக்கு எதிராக நமது இளைஞர்கள் காட்டிவரும் ஆர்வமும் விவாதங்களும் யாரும் நமது மக்களை ஏமாற்றிவிட முடியாது என்பதனை தெளிவாக எடுத்தியம்புகிறது.
14060435_689559181198204_1475594239_o_Fotor
நவீன உலகத்தில் சேவைகள் காலடிக்கு வந்து கிடைக்குமளவிற்கு தொழில்நுட்பமும் மனிதவளமும் அதிகரித்து காணப்படும் இக்காலகட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி வடக்கையும் கிழக்கையும் இணைக்கவேண்டும் என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் இணைந்த வடகிழக்கு மாகானத்தில்  முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் பகையை மூட்டி தமிழர்களின் வாக்குகளை சிதறவிடாமல் ஒன்றுசேர்த்து வெற்றி பெறுவதன் மூலம் ஒரு நிரந்தர  எதிர்க்கட்சியாக உலகம் அழியும் மட்டும் ,முஸ்லிம்களை  வைத்திருக்க  வேண்டும் என்பதனை நோக்கமாக கொண்டு இயங்குகின்றது   ஏனென்றால்..
 
வடமாகாணம் 5 மாவட்டங்களை கொண்டுள்ளது அதனால் முதலைமச்சர் மற்றும்  மாகான அமைச்சர்களையும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரித்துக்கொடுத்து அங்குள்ள மக்களுக்கு சேவை செய்யலாம் அதேபோன்று கிழக்கு மாகாணம் மாவட்டங்களைக்கொண்டது பெரும்பாலும் தனித்து எந்தக்கட்சியும்  பெரும்பான்மை பலத்தை  கொண்டு ஆட்சி அமைக்க முடியாது என்பதால் கூட்டுச் சேர்ந்துதான் ஆட்சி  அமைக்க முடியும் ஆகவே இங்கே காணப்படுகின்ற  5  அமைச்சுக்களைக்  கொண்டும் மக்களுக்கு முடியுமான சேவைகளை வழங்கலாம் அத்தோடு இனங்களுக்கிடையே ஒரு நல்லுறவும் மேம்பட்டு வளர்வதற்கான சூழ்நிலை அதிகரிக்கும் .
 
மாறாக வடக்கும் கிழக்கும் ஒரு மாகாணமாக இணைக்கப்ப்படுமானால் முதலமைச்சரோடு இணைந்து 4 மாகான அமைச்சுக்கள் வழங்கப்படும்
இங்குதான் TNA முஸ்லிம்களை நசுக்க திட்டம் போடுகிறது இணைந்த வடகிழக்கில் பெரும்பான்மை பலத்தோடு TNA வெற்றி பெறும்போது அமைச்சுகள்  அனைத்தையும் தமது கட்சி உறுப்பினர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் அதுதான் யதார்த்தமும் கூட என்னென்றால் தோல்வி பெற்ற கட்சிக்கு யாரும் அமைச்சு வழங்குவதில்லை  அந்தவேளையில் முஸ்லிம்களின் நிலை என்ன?
 
பாராளுமன்றத்தில் 20 கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் எவராவது முஸ்லிம் பாடசாலைக்கோ  அல்லது முஸ்லிம் சமூகத்துக்கோ கணிசமான நிதியினை  ஒதுக்கி இருக்கிறார்களா? இல்லை சேவை செய்திருக்கிறார்களா? அப்படி இருக்கும் போது மாகான அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு அல்லது மற்றைய மக்களுக்கு சேவை செய்வார்கள் என்பது கானல் நீராகும் இதனைவிடவும்  வடமாகான மேட்டுக்குடி ஆதிக்கம் கொண்ட தலைவர்கள் கிழக்கு தமிழர்களுக்கு ஒரு மாகான அமைச்சு கொடுப்பதும் வேண்டாவெறிப்பில்தான்.இருக்கும்.
 
அதேநேரம் பொத்துவில் கூமுனையில் இருக்கும் ஒருத்தர் முதலமைச்சரை சந்திக்கவேண்டும் என்று நினைத்தால் வடமாகாணத்தின் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் காரியாலயத்துக்கு சுமார் 525 கிலோ மீற்ரர் தூரம் தாண்டிப்போய்  சந்திக்க வேண்டும் இவ்வாறான ஒரு நெருக்கடியான நிலையை TNA ஏற்படுத்த துடிப்பதன் அவசியம் என்ன?
 
முஸ்லிம்களை சிருபான்மைக்குள் சிறுபான்மையாக்கி மண்டியிட வைக்க வேண்டும் என்பதனை தவிர வேறெதுவும் கிடையாது.
 
TNA தமது மக்களின் இருப்புக்களை பாதுகாக்க பலமான அத்திவாரம் ஒன்றை அமைப்பதுக்கு மற்றைய சமூகத்தை பழிகொடுக்க  நினைக்கும்போது நாம் வாழும் சராசரி 65 வயதுக்குள் எமக்குப்பின் வரப்போகின்ற எமது சந்ததிகளுக்கு திடமான ஒரு இருப்பினை ஏற்பட்டுத்திவிடாமல் நாம் மரணித்துப் போகலாமா? என்று எமது பெரியோர்கள் எண்ணுவதில் என்ன தவறு இருக்கிறது.
 
எமது சந்ததியின் உன்னதமான இருப்பினை உறுதிப்படுத்த அம்பைவிட வேகமாக நமது இளைஞர்கள்  செயற்படுகின்ரார்கள்,  மக்களை தமது எழுத்துக்களினாலும் சந்திப்புக்களிநூடாகவும் தெளிவுருத்துகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்
நாங்கள் நம்புகின்றோம் உங்கள் முயற்சியும் வியர்வையும் வீண்போகாமல்  எமது வருங்கால சமூகத்துக்கு உரமாக விழும் என்று
 
நம்மை நசுக்க நினைத்தால் வில் அம்புகள் எதிரிகளின் இதயத்தை துளைக்கும் உலோகங்களாகவும் மாறும் என்பதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
 
 
தொடரும் ….