ஏ.எஸ்.எம்.ஜாவித்
இவ்வருட புனித ஹஜ் கடமைக்காகச் சென்ற இலங்கைக் ஹாஜி ஒருவர் புனித மக்காவில் வபாத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஓட்டமாவடி, மீராவோடையைச் சேர்ந்த எஸ்.எல். ஹயாத்து முஹம்மது (67வயது) இன்று (2016.08.21) புனித மக்காவில் மாரடைப்புக் காரணமாக வபாத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று மக்காவில் இடம் பெறவுள்ளது.
இவர் தனது துணைவியாருடன் புனித கடமையை நிறைவேற்றச் சென்றமை குறிப்பிடத்தக்கது.