அரசாங்கத்தை கவிழ்க்கும் திகதியை முன்கூட்டியே அறிவிக்க முடியாது என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜா-எல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன,
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கும் எதிர்பார்ப்பு தற்போது சிதைந்து போயுள்ளது என் கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் அனுபவிக்கவில்லை எனக் கூறிய போது வெற்றிலை அரசாங்கம் ஒன்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் வாக்களித்தனர்.
வெற்றிலைச் சின்னத்தின் தலைமையின் கீழ் ஆட்சியமைக்கவே மக்கள் வாக்களித்தனர். ஐக்கிய தேசியக்கட்சியி்ன அரசாங்கம் ஒன்றை அமைக்க மக்கள் வாக்களிக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ஒருவரின் கீழ், வெற்றிலையில் வெற்றி பெற்றவர்கள், இந்த அரசாங்கத்தில் பதவிகளை வகித்து கொண்டு, தம்மிடம் வருமாறு மக்களை அழைத்தாலும் மக்கள் அவர்களிடம் செல்ல மாட்டார்கள்.
இதுதான் அரசியல் நெருக்கடி.அரசாங்கத்தை கவிழ்க்கும் தினத்தை முன்கூட்டியே கூறமுடியாது.
பிரித்தானிய பிரதமர் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. அதனை முன்கூட்டியே கூறவில்லை.
அரசியல் பிரச்சினை ஒன்று ஏற்பட்டு அதனை எதிர்கொள்ள முடியாமல் பதவி விலகுவார்கள் என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.