துருக்கியில் சிரியா நாட்டின் எல்லையோரம் காசியான்டெப் நகரம் உள்ளது. நேற்று அங்கு ஒரு திருமண விழா நடந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விருந்து மற்றும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என விழா களை கட்டியது. நள்ளிரவில் கூட்டத்துக்குள் தற்கொலை படை தீவிரவாதி புகுந்தான். பின்னர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.
இத்தாக்குதலின்போது சம்பவ இடத்திலேயே 22 பேர் பலியான நிலையில் இன்று பிற்பகல் நிலவரப்படி சிகிச்சை பலனின்றி மேலும் 28 பேர் உயிர் இழந்துள்ளனர், இதனால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
படுகாயம் அடைந்த சுமார் 100 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.