கொழும்பு மாநகரசபையின் மேயர் பதவி ரோசி சேனாநாயக்கவிற்கு?

கொழும்பு மாநகரசபையின் மேயர் பதவி ரோசி சேனாநாயக்கவிற்கு வழங்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

rosy
கொழும்பு மாநகரசபையின் புதிய மேயராக ரோசி நியமிக்கப்படக் கூடும் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ரோசி சேனாநாயக்க தற்பொழுது பிரதமர் அலுவலகத்தில் கடமையாற்றி வருகின்றார்.
தற்போது கொழும்பு மாநாகரசபையின் மேயராக கடமையாற்றி வரும் ஏ.ஜே.எம். முஸாம்மில் மலேசிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட உள்ளார்.
தம்மை உயர்ஸ்தானிகராக நியமிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் எந்தவிடயமும் இறுதியாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.