ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான கொள்கைகள் தமது தரப்பினரிடமே இருப்பதாகவும் இதனால், கட்சியின் உண்மையான உரிமை கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவர்களுக்கே இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நலன் அறியும் நோக்கில் நேற்று மகசீன் சிறைக்கு சென்று திரும்பும் வழியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மஹிந்த,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா மாநாட்டில் கலந்து கொள்வது சம்பந்தமாக இதுவரை சரியான முடிவு எதனையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
சர்வாதிகாரத்தை தான் நிராகரிப்பதாகவும் இது சம்பந்தமாக ஜனநாயகமான அனைவருடனும் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுக்கவிருப்பதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பிரதமர் நிராகரித்த சீன மற்றும் சீன அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது அவசியமாகியுள்ளது.
களஞ்சியத்திற்காக ஒதுக்கப்பட்ட மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பவற்றை தொடர்ந்தும் நடத்தி செல்ல தீர்மானிக்கப்பட்டமை சம்பந்தமாக மகிழ்ச்சியடைவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.