அரசாங்கம் அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப்) தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ரக்னா லங்கா போன்ற பல நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதை கோப்குழு கண்டறிந்துள்ளது.
இப்படியான முறைகேடுகள் காரணமாக ஏற்பட்ட நஷ்டம் அதிவேக நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்களை நிர்மாணிக்க செலவிடப்பட்ட தொகையை விட அதிகம்.
திருடர்கள் கொள்ளையடித்த பொருட்களை திருப்பி கொடுத்தால், அவர்கள் விடுதலை பெற்றுச் செல்லலாம் என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.