வெலிக்கட சிறைச்சாலையை ஹொரண பகுதியில் அமைப்பது தொடர்பில் அனுமதி பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதி வழங்கிய பின்னர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
ஹொரண பகுதியில் 20 ஏக்கர் நிலத்தில் புதிய சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் 4 ஏக்கர் நிலத்தில் தற்காலிகமாக கைதிகளுக்கான சிறைச்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.